Sunday, July 3, 2011

பரபர திரைக்கதையில் பில்லா-2 !


பரபர திரைக்கதையில் பில்லா-2 !
அஜீத் நடித்து வெளிவர இருக்கும் 50 வது படமான 'மங்காத்தா' படத்தின் இசை வெளியீட்டு தேதி கூட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கபடவில்லை. ஆனால் அதற்குள் அஜீத் நடிப்பில் வெளிவர இருக்கும் அடுத்த படத்திற்கான வேலைகள் ஜோராக ஆரம்பித்து இருக்கின்றன.

அஜீத் நடிப்பில் தயாராக இருக்கும் படம் 'பில்லா-2'. இப்படத்தை 'உன்னைப்போல் ஒருவன்' இயக்குனர் சக்ரி  இயக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலை இரண்டாம் வாரத்தில் ஹைதராபாத்தில் துவங்க இருக்கிறது.

சாதாரண மனிதனாக இருந்தவன் எப்படி உலகத்தை மிரள வைத்த பில்லாவாக உருவானான் என்பதே பில்லா 2வின் கதை.

அஜீத் இதற்காக தீவிர பயிற்சி செய்து உடம்பை மேலும் மெருக்கேற்றி இருக்கிறார். இப்படத்திற்கு இதன் முதல் பாகமான 'பில்லா'வைப் போலவே அதி வேகமான திரைக்கதை அமைத்து இருக்கிறாராம் சக்ரி.

No comments:

Post a Comment